India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய் ஜூன் 22இல் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அன்னதானம், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷின் வழங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 24ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மொத்த வருவாயில், டாஸ்மாக் வருவாய் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒரு வேளை பூரண மது விலக்கு கொண்டு வருவதாக இருந்தால், அந்த வருவாய்க்கான மாற்று வழிகளை அரசு கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. அதே நேரம், மது விலக்கால் மாநில அரசுக்கு ஏற்படும் நிதி சுமையில் மத்திய அரசு பங்கெடுப்பதும் முக்கியம். இத்தனைக்கும் முன்னால், மது பிரியர்களின் மன மாற்றமே உண்மையான மது விலக்கை நோக்கி தமிழகத்தை நகர்த்தும்.
காலங்காலமாக மது அருந்தி வருபவர்கள் உடனடியாக மது பழக்கத்தை கைவிடுவது சாத்தியமில்லை. மது பழக்கத்தை கைவிட்டவர்களுக்கு பதற்றம், கைகால் உதறுதல், சோர்வு என பல பிரச்னை ஆரம்பத்தில் ஏற்படலாம் எனக் கூறும் மருத்துவர்கள், மன ரீதியான சவால்களையும் சந்திக்க நேரிடும் என்கிறார்கள். அந்த வகையில், மது விலக்கை அமல்படுத்துவதற்கு முன்பு, மறுவாழ்வு மையங்களை அதிகரித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் முக்கியம்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது. ஆனால், ஒரே நாளில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பிஹார், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மது விலக்கு அமலில் உள்ளது. அதே நேரம், அந்த மாநிலங்களில் போலி மதுபானங்கள், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி, இன்னும் சில நாள்களுக்குள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஜூன் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 உயிர்களை பறித்த மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் நடந்த ஓர் ஆண்டில், கள்ளக்குறிச்சியில் மீண்டும் அதேபோன்ற சம்பவத்தில் 5 பேர் பலியானதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகளுடன் அமைச்சர் மஸ்தான் தொடர்பில் இருப்பது தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மஸ்தானையும், விற்பனையை தடுக்காத அமைச்சர் முத்துசாமியையும் பதவி நீக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அளவிடுவதற்கு திரைநேரம், கீபோர்டின் கிளிக்கிங் ஆகியவற்றை நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், மவுஸ் ஜிக்லர்கள் போன்ற கிஸ்மோக்களைக் கொண்டு, போலியாக வேலை செய்வதை போன்று நடித்து வந்த 12க்கும் மேற்பட்ட ஊழியர்களை பிரபல வங்கி பணி நீக்கம் செய்துள்ளது. இந்த மவுஸ் மூவர்கள், திரையை ஆஃப் செய்யாமல் தன்னிச்சையாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தில் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். ஓராண்டாக தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகியதாகக் கூறிய அவர், திமுக அரசு காப்பீட்டுத் திட்டம் அறிவிக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக காலத்தில் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.