News June 19, 2024
கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியம் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News January 20, 2026
குமரி: அருமனை அருகே சிக்கிய பிரபல திருடன்

குமரி அருகே அருமனை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வந்தது. இதையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெகன் அச்சுதன் (40) என்ற நபரை பொதுமக்கள் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மீது 64 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர் தற்போது குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
News January 20, 2026
அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
News January 20, 2026
அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


