News June 19, 2024
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு 24ஆம் தேதி ஹால் டிக்கெட்

ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 24ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN கண்டதில்லை: SP

சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு களங்கத்தை கவர்னர் RN ரவி ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், மரபுப்படி தேசிய கீதம் இறுதியில் பாடப்படும் என சபாநாயகர் கூறியும் கவர்னர் ஏற்கவில்லை என்றும், மைக் ஆஃப் செய்யப்பட்டது என அப்பட்டமாக பொய் பேசும் இப்படி ஒரு அநாகரிக கவர்னரை TN சட்டமன்றம் இதுவரை கண்டதில்லை எனவும் SP வேதனை தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்கிறேன்: கனிமொழி

மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மௌனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். <<18883288>>ஏ.ஆர்.ரஹ்மான்<<>> நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல; இந்தியாவின் கலாசார விழுமியங்களின் முதன்மையான தூதர் என்று கூறியுள்ளார். தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 20, 2026
‘ஜன நாயகன்’ பட வழக்கு.. ஐகோர்ட் அதிரடி

‘ஜன நாயகன்’ பட விவகாரம் தொடர்பான வழக்கு <<18907367>>விசாரணையில்<<>> இரு தரப்பு வாதங்களையும் சென்னை HC கேட்டது. இதனையடுத்து அதிரடி கருத்துகளை கூறிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். குறிப்பாக, அரை மணி நேரத்தில் வாதத்தை முடித்திருந்தால் இன்றே தீர்ப்பை வழங்கி இருப்போம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


