India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநிலத்தை சேர்ந்த சந்தன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு முதல் பெய்துவரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 18.82 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் விரைவில் நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும். ஆகவே ஏரி, கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
IDBI வங்கியில் காலியாக உள்ள 600 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த காலி பணியிடங்கள் அனைத்தும் ஜூனியர் அசிஸ்டென்ட் நிலையிலான பதவிகள் ஆகும். இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அது இன்றுடன் முடிவடைகிறது. வேலையில் சேர விரும்புவோர் https://www.idbibank.in/ இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ஃபெஞ்சல் புயல் மீட்புப் பணிக்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. களத்தில் திமுக என்ற பெயரில் 8069446900 என்ற உதவி எண் மூலம் பொதுமக்கள் அவசர உதவி கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கனமழையையும் சூறைக்காற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல் கடந்த 3 நாள்களாக இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அதன் விளைவாக அங்கு இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், பாதிப்புகளை சீர் செய்யும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபடுட்டுள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் அதிமுக உதவி எண்களை அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ‘களத்தில் அதிமுக’ எனப் பெயரில் சோழிங்கநல்லூர், ராயபுரம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <
4 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 28ஆம் தேதி தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு, உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ராணுவ பயிற்சி கல்லூரி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக அவரது திருவாரூர் பயணம் இன்று ரத்து செய்யப்பட்ட நிலையில், நாளை டெல்லி புறப்படவிருந்த நிலையில், இன்றே டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்திக்கு என சமூக வலைதளத்தில் தனி அக்கவுண்ட் தொடங்கியது குறித்து விளக்கம் அளிக்க கன்னட மொழி மற்றும் கலாசார அமைச்சகம் RCBக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கன்னட அமைப்புகள் RCBக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது. விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு, இனி வரும் காலங்களில் பெங்காலி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு மொழிகளில் அக்கவுண்ட் தொடங்க உள்ளதாக RCB தெரிவித்துள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்புகள் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிச.9ஆம் தேதி தொடங்கும் தேர்வு, 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6, 8ஆம் வகுப்புகளுக்கு காலையும், 7, 9, 11ஆம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. டிச.24 முதல் ஜன.1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜன.2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை இப்புயல் மகாபலிபுரத்துக்கும் காரைக்காலும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.