News November 30, 2024
வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி

இரவு முதல் பெய்துவரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 18.82 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் விரைவில் நீர்மட்டம் அதிகரிக்கக் கூடும். ஆகவே ஏரி, கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும்.
Similar News
News November 17, 2025
சீட் ஷேரிங்கில் திமுக உடன் பிரச்னையா? காங்., MP பதில்

திமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு மாணிக்கம் தாகூர் பதிலளித்துள்ளார். காங்கிரஸுக்கு பலத்தின் அடிப்படையில் அதிகாரமும், சீட்டும் வேண்டும் என நாங்கள் நினைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார். அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது மட்டுமே எங்கள் வேலையா என தொண்டர்கள் கேட்கின்றனர் எனவும், இதற்கு காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில், சரியான முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News November 17, 2025
பாகிஸ்தானில் நொடியில் தப்பிய பயணிகள் ரயில்

பாக்.,கில் தனி நாடு கோரி பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்காக நசீராபாத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் வெடிகுண்டு இருந்துள்ளது. ஆனால், அது ரயில் சென்ற பிறகே வெடித்தது. இதனால் பயணிகள் உயிர்தப்பினர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருள்களை கைப்பற்றி, அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
ரயில்வேயில் 5,810 Vacancies: சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <


