India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!

காலையில் இருந்து தற்போது வரை சென்னையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தனியார் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டதாக பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு இடமளிக்க வேண்டும் என்று CPR-யிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, ‘அனைவரையும் சமமாக நடத்தும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் நீங்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

தலைப்பே ஆர்வத்தை கிளப்புகிறதா! நாட்டில் எந்த மாநில MLA-க்கள் அதிக சொத்து உடையவர்களாக உள்ளார்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். இந்த பட்டியல், தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்க இந்த லிஸ்ட்டில் எந்த மாநில MLA-க்கள் முதல் இடத்தில் இருப்பார்கள் என நினைத்தீர்கள்?

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்ற நிலையில், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜயன், 1999 முதல் தொடர்ந்து 3 முறை நாகை MP ஆக இருந்தவர்.

நடிகை சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும். Family man வெப் தொடரின் சூட்டிங்கில் அறிமுகமாகி, காதலித்து இன்று இருவரும் தம்பதிகளாக மாறியுள்ளனர். ராஜ் இயக்கிய ‘சிட்டாடல் ஹனி பன்னி’ வெப் தொடரிலும் சமந்தா நடித்திருந்தார். வாழ்த்துகள் சமந்தா!

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

USA-ல் தற்போது சட்டவிரோத குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் காட்டினால் ஒரு மாதத்துக்கு இலவச பீர் வழங்குவதாக அங்குள்ள, ‘ஓல்டு ஸ்டேட் சலுான்’ மதுபான கடை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, சர்ச்சையை கிளப்புவதில் இக்கடை செம்ம பேமஸ். முன்னதாக, Pride மாதத்தின் போது LGBTQ-வினருக்கு எதிராக இக்கடை விளம்பரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.