News August 7, 2024

Olympics: தகுதி நீக்கத்திற்கான காரணம் என்ன?

image

50 கிலோ எடை பிரிவில் விளையாடிய வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காலிறுதி, அரையிறுதிப் போட்டிக்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்ததாகவும், அதனால் கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை 2 கிலோ வரை அவர் குறைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒலிம்பிக்ஸில் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 15, 2025

கில்லியின் சாதனையை முறியடிக்குமா படையப்பா?

image

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தியேட்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறது. ‘படையப்பா’ படம் இதுவரை ₹4 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், நடிகர் விஜய்யின் ‘கில்லி’ படம் அதிகபட்சமாக ₹10 கோடியை குவித்துள்ளது. அந்த சாதனையை விரைவில் ‘படையப்பா’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 15, 2025

SPORTS 360°: ஓடிசா மாஸ்டர்ஸில் உன்னதி, கிரண் சாம்பியன்

image

*மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்றார். *ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆண்கள் பிரிவில் கிரண்ஜார்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
*38 அணிகள் பங்கேற்கும் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது.

News December 15, 2025

வரலாற்றில் இன்று

image

*1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
*1950 – இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்தநாள்.
*1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவாக அப்துல் ரவூஃப் தீக்குளித்து இறந்தார்.
*1997 – தென் கிழக்கு ஆசியா அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
*2013 – தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

error: Content is protected !!