News September 12, 2024
மாணவர்களுக்காக அரசு பணியை உதறிய அதிகாரி

IRS அதிகாரி ரவி கபூர், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச வழிகாட்டுதல் பயிற்சியை வழங்கி வருகிறார். கடந்த 2021ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது 3 லட்சம் மாணவர்கள் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். மன ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள், கல்வி சார்ந்து தேவையான உதவிகள், வழிகாட்டுதல்களை அவர் வழங்கிவருகிறார்.
Similar News
News November 4, 2025
சூடுபிடிக்கும் மகளிர் பிரீமியர் லீக்

2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியலை நாளைக்குள் சமர்ப்பிக்குமாறு, அணி நிர்வாகங்களுக்கு BCCI அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ODI உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுள்ளதால், 2026 WPL-க்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News November 4, 2025
விஜய் கட்சியின் சின்னம் இதுவா..!

2026 தேர்தலில் தவெகவின் சின்னத்தை அறிய பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சின்னத்திற்கு விண்ணப்பிக்க நாளை தவெகவினர் டெல்லி செல்கின்றனர். இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்து வைத்திருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. ஆட்டோ, விசில் சின்னங்கள் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
News November 4, 2025
அழகியே.. அரசியே.. சமந்தா

சுட்டி சமந்தாவின் சேட்டைகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. SM-யில் ஆக்டிவா இருக்கும் சமந்தா, இன்ஸ்டாவில் அடிக்கடி அழகான போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்ட போட்டோஸை பார்த்தவுடன், ‘24’ படத்தில் வரும் “மெய் நிகரா” பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு எந்த பாடல் நினைவுக்கு வந்தது? கமெண்ட் பண்ணுங்க!


