News September 12, 2024
மாணவர்களுக்காக அரசு பணியை உதறிய அதிகாரி

IRS அதிகாரி ரவி கபூர், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச வழிகாட்டுதல் பயிற்சியை வழங்கி வருகிறார். கடந்த 2021ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது 3 லட்சம் மாணவர்கள் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். மன ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள், கல்வி சார்ந்து தேவையான உதவிகள், வழிகாட்டுதல்களை அவர் வழங்கிவருகிறார்.
Similar News
News April 10, 2026
BREAKING: விஜய் பரப்புரையில் மயக்கம்.. பதற்றம் உருவானது

காரைக்குடியில் விஜய்யின் பரப்புரையை காணச் சென்ற பெண் உள்பட 3 பேர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது. எனினும், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பகல் 12 மணி முதல் 2.30 வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், விஜய் பரப்புரை இடத்திற்கு செல்வதற்கே 2.30 மணிக்கு மேலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
News April 10, 2026
தமிழ் புத்தாண்டு விடுமுறை.. 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. இன்று (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC <
News April 10, 2026
EPS ஒரு வியாபாரி: கிருஷ்ணசாமி

ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுக நினைத்ததாகவும் பேசியுள்ளார். இம்முறை EPS-க்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>


