News May 6, 2024
மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகளில் பெறலாம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானதும், அந்தந்தப் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்களை 9.45 மணி முதல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பள்ளியிலேயே பெறலாம்.
Similar News
News August 24, 2025
குண்டாக உள்ளவர்களே இங்கு ஹீரோ..!

ஸ்லிம்மாக இருப்பதை ஃபிட் என நினைக்கிறோம். ஆனால் எத்தியோப்பியாவில் உள்ள போடி பழங்குடியினர் குண்டாக இருப்பதை பெருமையாக கருதுகின்றனர். இதற்காக போட்டியும் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும் இளைஞர்கள் 6 மாதங்கள் வேலைக்கு செல்லாமல் சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே இருப்பார்களாம். போட்டியின் அன்று யார் அதிக எடை கூடியிருக்கிறார்களோ அவரே ஹீரோ. அங்குள்ள பெண்களும் குண்டான இளைஞர்களையே விரும்புகிறார்களாம்.
News August 24, 2025
நெல்லை கூட்டத்தால் அமித்ஷா அப்செட் என தகவல்

அண்மையில் நெல்லையில் நடந்த பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அமித்ஷா கூட்டத்தை பார்த்ததும் அப்செட் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என அவரிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதில் பாதி பேர் கூட வராததால் பல இருக்கைகள் காலியாக இருப்பதை கண்டு அதிர்ந்ததோடு, மாநாட்டில் பேசும்போது மொத்தக் கூட்டமும் கலைந்ததை கண்டு அவரே அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.
News August 24, 2025
பாப் மார்லி பொன்மொழிகள்

*சிலர் மழையை உணர்கிறார்கள். சிலர் வெறுமனே நனைகிறார்கள்.
* உலகை அடைந்து உங்கள் ஆன்மாவை இழக்காதீர்கள். தங்கம் வெள்ளியை விட ஞானமே சிறந்தது.
* இசை குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அது உங்களை தாக்கும் போது உங்களுக்கு வலிப்பதில்லை.
* சிறையில் உழல்வதைவிட, போராடி மரித்துப் போ.
* நான் படிக்கவில்லை. தேடல் மட்டுமே என்னிடம் இருந்தது. படித்திருந்தால் நான் முட்டாளாகி இருப்பேன்.