News August 24, 2025
பாப் மார்லி பொன்மொழிகள்

*சிலர் மழையை உணர்கிறார்கள். சிலர் வெறுமனே நனைகிறார்கள்.
* உலகை அடைந்து உங்கள் ஆன்மாவை இழக்காதீர்கள். தங்கம் வெள்ளியை விட ஞானமே சிறந்தது.
* இசை குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அது உங்களை தாக்கும் போது உங்களுக்கு வலிப்பதில்லை.
* சிறையில் உழல்வதைவிட, போராடி மரித்துப் போ.
* நான் படிக்கவில்லை. தேடல் மட்டுமே என்னிடம் இருந்தது. படித்திருந்தால் நான் முட்டாளாகி இருப்பேன்.
Similar News
News January 15, 2026
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 15, 2026
தமிழகத்தின் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில், ₹3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை DCM உதயநிதி இன்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில், திருச்சிக்கு மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி அடையாளமோ, அதே போன்று சூரியூர் ஜல்லிக்கட்டும் ஒரு அடையாளம் என்றவர், இதுவரை மந்தையில், குளத்தில் நடந்த சூரியூர் ஜல்லிக்கட்டு நாளை ஜன.16 முதல் இந்த நிரந்தர அரங்கில் நடைபெறும் என அறிவித்தார்.
News January 15, 2026
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.


