News September 14, 2024
ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஜான்டி ரோட்ஸ்

மகளுக்கு ‘இந்தியா’ கோவாவில் வாழும் தன்னை ஃபீல்டிங் பயிற்சியாளராக BCCI வேண்டாம் என சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். BCCI சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை, ஆனால் நான் உள்ளூர்காரர்தான், ஒருவேளை கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேறு ஒரு மெட்ரோ நகருக்கு குடிபெயர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Similar News
News January 26, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.
News January 26, 2026
2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.
News January 26, 2026
சிஷ்யனை கிண்டலடித்த யுவராஜ் சிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20-யில் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 2007-ல் இங்கி., அணிக்கு எதிராக இந்திய Ex வீரர் யுவராஜ் சிங் 12 பந்தில் அதிவேக அரைசதம் கண்டதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. இந்நிலையில் யுவராஜ், இன்னும் உங்களால் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லையே என ஜாலியாக சீண்டியதுடன், தொடர்ந்து இதுபோல் சிறப்பாக ஆடுங்கள் எனவும் பாராட்டியுள்ளார்.


