News October 12, 2025
தீபாவளிக்கு இதை செய்தால் கண்டிப்பா ஜெயில்தான்!

தீபாவளி கொண்டாட்டத்தின் போது வேண்டுமென்றே விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்காதீங்க. அத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து புகாரளிக்கவும், காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கவும் ‘1962’ என்ற நம்பருக்கு அழைக்கலாம். எனவே எந்த ஜீவனுக்கும் இடையூறு செய்யாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள். SHARE.
Similar News
News October 12, 2025
எப்போது திருமணம்? ஐஸ்வர்யா ராஜேஷ் அப்டேட்

கூடிய விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். துவக்கத்தில் தனித்துவமான கேரக்டர்களால் ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்த ஐஸ்வர்யா, சமீப காலமாக சரியான படங்களில் நடிக்கவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. இதனால் அவ்வப்போது போட்டோஷூட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் அவர், கடை திறப்பு விழாக்களிலும் கலந்துகொள்கிறார். அத்துடன், சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
News October 12, 2025
மோசமாக அடிக்காதே.. லாரா – ஜெய்ஸ்வால் க்யூட்

‘எங்களுடைய பவுலர்களை மோசமாக அடிக்காதே’ என்று புன்னகையுடன் ஜெய்ஸ்வாலிடம் WI கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கோரிக்கை வைத்தார். அதற்கு, ‘முயற்சி செய்கிறேன் சார்’ என ஜெய்ஸ்வால் புன்னகையுடன் பதிலளித்தார். முன்னாள், இந்நாள் லெஜன்ட்ஸ் பேசிய இந்த க்யூட் மொமண்ட் தற்போது வைரலாகிறது. இந்த டெஸ்ட் போட்டியை ஜாம்பவான்களான பிரைன் லாரா, VV ரிச்சர்ட் பார்த்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
News October 12, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் <<17984664>>கடும் நடவடிக்கை<<>> எடுக்கப்படும் என எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பல ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து இதுகுறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.