News September 30, 2025
மூலிகை: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள், கரும் தழும்புகள் மீது பூச அவை மறையும் *அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டால், கொப்புளங்கள் தணியும் *நரம்பு தளர்ச்சியை போக்க, ஜாதிக்காய் உதவும் *ஜாதிக்காயின் விதைகளின் மேலுள்ள ‘ஜாதிபத்ரி’ திசு வயிற்றுப் போக்கு, உப்புசம் ஆகியவற்றை போக்கும். SHARE.
Similar News
News September 30, 2025
கைதான TVK நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 30, 2025
உங்களுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் இருக்கா?

உங்களுக்கு புகைபிடித்தல், மது அருந்துதல், அதிகமாக Fast food சாப்பிடும் பழக்கம் இருக்கா? இந்த பழக்கங்களில் இருந்து விடுபட சில வழிகள் இருக்கிறது. இந்த கெட்ட பழக்கங்களில் இருந்து ஒரே நாளில் விடுபட முடியாது என்றாலும், இதனை நாளடைவில் கைவிடலாம். அது எப்படி என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 30, 2025
மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத விஜய்: கனிமொழி

கரூரில் மக்களுடன் நின்றது திமுக அரசுதான் என கனிமொழி பதிலளித்துள்ளார். மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல், தனது பாதுகாப்பை மட்டும் கருதி ஒரு தலைவர் செல்வதை தான் பார்த்ததே இல்லை என கூறிய அவர், தவெகவின் அடுத்தக்கட்ட தலைவர்களாவது மக்களோடு நின்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், இது யாரையும் பழிசொல்லவோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை எனவும் கூறியுள்ளார்.