News September 30, 2025
மூலிகை: ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள், கரும் தழும்புகள் மீது பூச அவை மறையும் *அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை பொடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டால், கொப்புளங்கள் தணியும் *நரம்பு தளர்ச்சியை போக்க, ஜாதிக்காய் உதவும் *ஜாதிக்காயின் விதைகளின் மேலுள்ள ‘ஜாதிபத்ரி’ திசு வயிற்றுப் போக்கு, உப்புசம் ஆகியவற்றை போக்கும். SHARE.
Similar News
News December 14, 2025
தமிழகத்தில் SIR படிவ பதிவேற்றம் நிறைவு

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழகத்தில் SIR படிவங்களை நிரப்பி அளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பிப்.14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதனிடையே, நவ.4 முதல் பெறப்பட்ட SIR படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
News December 14, 2025
BREAKING: பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக் காலம் முடிந்தும் கட்சியின் தேசியத் தலைவராக JP நட்டா நீடித்துவரும் நிலையில், செயல் தலைவராக நிதின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஹார் மாநில அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற முக்கிய பங்காற்றியதால் இந்த பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
News December 14, 2025
இந்த ரோடு டிரிப்ஸ் சூப்பரா இருக்கும்.. டிரை பண்ணுங்க

ரோடு டிரிப் என்பது மனதிற்கு புத்துணர்வு தரும் அனுபவம். பயணத்தின்போது புதிய காட்சிகளை பார்க்க முடிகிறது, புதிய மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பயணம் செய்யும்போது மனதிற்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. நம்மை நாமே புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது. அழகான ரோடு டிரிப் அனுபவத்தை தரும் சாலைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


