News September 30, 2025
மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத விஜய்: கனிமொழி

கரூரில் மக்களுடன் நின்றது திமுக அரசுதான் என கனிமொழி பதிலளித்துள்ளார். மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல், தனது பாதுகாப்பை மட்டும் கருதி ஒரு தலைவர் செல்வதை தான் பார்த்ததே இல்லை என கூறிய அவர், தவெகவின் அடுத்தக்கட்ட தலைவர்களாவது மக்களோடு நின்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், இது யாரையும் பழிசொல்லவோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
News December 12, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டர் Prescription கொடுத்தால், அதிலிருக்கும் பல Short form வார்த்தைகள் என்னவென்றே புரியாது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்.. இவற்றை ஞாபகம் வெச்சிக்கோங்க: ◆Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) ◆Rx- Prescription (மருந்துக்குறிப்பு) ◆Tx- Treatment (சிகிச்சை) ◆Sx- Surgery (அறுவை சிகிச்சை) ◆Hx- History (மருத்துவ வரலாறு) ◆Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 12, 2025
தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.


