News September 11, 2024
பிரபல இந்தி நடிகையின் தந்தை தற்கொலை

பிரபல இந்தி நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தியில் ஹவுஸ்புல், கப்பார் சிங், தபாங் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மலைகா அரோரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
யானையும் டிராகனும் ஒன்றிணையுமா?

இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதுபற்றி பேசிய EAM ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையேயான வித்தியாசம், தகராறாக மாறக் கூடாது என்றார். மேலும், நாம் விரும்புவது நியாயமான, பலதுருவ உலக ஒழுங்கை தான் (பலதுருவ ஆசியா உள்பட). உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர இது அவசியமாகும் என்றும், இந்த சந்திப்பு பரஸ்பரம் பலன் தரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
Chips பாக்கெட்டில் காற்று… இது தான் காரணமாம்!

சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவது ஏன் தெரியுமா? உடையாமல், நொறுங்காமல், சிப்ஸ் அப்படியே கஸ்டமர் கைக்கு போகவே இந்த ஏற்பாடு. பாக்கெட்டில் அதிக சிப்ஸ் இருந்தால், நொறுங்கி விடும். இதை தவிர்க்கவே நைட்ரஜன் கேஸ் நிரப்புகிறார்கள். ஏன், ஆக்சிஜன் நிரப்பலாமே என்கிறீர்களா? ஆக்சிஜன் எளிதில் வினை புரியக் கூடியது. அதனால் சிப்ஸ் நமத்துப் போகவும், கெட்டுப் போகவும் செய்யலாம். புரிகிறதா? SHARE IT.
News August 18, 2025
இதய நோயை 12 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம்

இதய நோய் வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது. 5 கிமீ வேகத்தில் நடந்தாலே சிரமப்படுதல், சின்ன வேலைகள் செய்தாலே விரைவாக சோர்வடைதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரை அணுகவும். மேலும், வேக நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.