News August 18, 2025
இதய நோயை 12 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம்

இதய நோய் வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே, அதன் அறிகுறிகள் தென்பட தொடங்கும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோஸியேஷன் தெரிவித்துள்ளது. 5 கிமீ வேகத்தில் நடந்தாலே சிரமப்படுதல், சின்ன வேலைகள் செய்தாலே விரைவாக சோர்வடைதல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், அலட்சியப்படுத்த வேண்டாம். உடனே டாக்டரை அணுகவும். மேலும், வேக நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
Similar News
News December 10, 2025
IND vs SA முதல் T20: வரிசைக்கட்டிய ரெக்கார்டுகள்!

☆சர்வதேச T20-ல் குறைந்த வயதில் 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை திலக் வர்மா(23 வயது 31 நாள்கள்) பெற்றுள்ளார் ☆சர்வதேச T20-ல் 100 சிக்ஸர்களை அடித்த 4-வது இந்தியராகியுள்ளார் ஹர்திக்(100 சிக்ஸர்கள்). ரோஹித்(205), SKY(155), கோலி(124) ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர் ☆சர்வதேச T20-ல் SA-ன் குறைவான ஸ்கோர் இது(74 ரன்கள்). 2022-ல் IND-க்கு எதிராக 87 ரன்களில் சுருண்டதே முந்தைய மோசமான ஸ்கோர்.
News December 10, 2025
பரபரப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தேர்தல் வியூகம், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி கூட்டங்கள் உள்ளிட்ட பலவும் இன்று விவாதிக்கப்பட உள்ளன. மேலும், பிரிந்தவர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News December 10, 2025
BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


