News September 28, 2025

CBI விசாரணை நடத்த வேண்டும்: OPS

image

கரூர் துயர சம்பவத்தை CBI விசாரிக்க வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை பொறுத்து நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வரைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News September 28, 2025

விசாரணை ஆணையத்தின் அதிகாரங்கள் என்னென்ன? (1/2)

image

➤மத்திய-மாநில அரசின் எத்தகைய உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ➤அரசின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெற முடியும். ➤விசாரணைகளை நடத்தி குற்றத்தை கண்டறியும்பட்சத்தில், அது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க முடியும் ➤ஆனால் குற்றவாளிகள் என ஆணையம் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு தண்டிக்க முடியாது. ➤ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்யும்.

News September 28, 2025

விசாரணை கமிஷன் அறிக்கை தந்த பின் என்னாகும்? (2/2)

image

➤அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து, வழக்கு தொடர்ந்து, அரசே வழக்கை நடத்தும் ➤வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் பட்சத்தில், கமிஷனின் அறிக்கையை அரசு முன்வைக்கலாம் ➤ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை ➤மீண்டும் சாட்சியங்களை விசாரிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு உள்ளது. இவைதான் விசாரணை கமிஷனின் பரிந்துரைகளின் அதிகாரங்கள்.தெரியாத தகவலை தெரிந்துகொண்டிருந்தால் லைக் பண்ணுங்க.

News September 28, 2025

PHOTO GALLERY: காதலனை கரம் பிடித்தார் செலினா கோமஸ்

image

உலகளவில் பிரபலமான அமெரிக்க பாடகி செலினா கோமஸ், தனது நீண்ட நாள் காதலனான பென்னி பிளாங்கோவை கரம் பிடித்தார். தங்களது திருமண புகைப்படங்களை செலினா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர் மற்றும் வீக்கெண்ட் ஆகியோரை செலினா டேட் செய்திருந்தார்.

error: Content is protected !!