News September 28, 2025
PHOTO GALLERY: காதலனை கரம் பிடித்தார் செலினா கோமஸ்

உலகளவில் பிரபலமான அமெரிக்க பாடகி செலினா கோமஸ், தனது நீண்ட நாள் காதலனான பென்னி பிளாங்கோவை கரம் பிடித்தார். தங்களது திருமண புகைப்படங்களை செலினா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக, பிரபல பாடகர்களான ஜஸ்டின் பீபர் மற்றும் வீக்கெண்ட் ஆகியோரை செலினா டேட் செய்திருந்தார்.
Similar News
News November 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

தங்கம் விலை இன்று(நவ.8) சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹165-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,65,000-க்கும் விற்பனையாகிறது. <<18232021>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை உயர்ந்ததன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை உயர்வை கண்டுள்ளது.
News November 8, 2025
எதெல்லாம் டிரெண்டா மாறுது பாருங்க மக்களே!

நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி SM-ல் பதிவிடுவது தற்போது ட்ரெண்டாக மாறியுள்ளது. காரணமே இல்லாமல் மன்னிப்பு கேட்குறாங்களே என குழம்ப வேண்டாம். எங்கள் நிறுவனம் இவ்வளவு அருமையாக இருக்கிறது, அதனால்தான் உங்களால் தவிர்க்கமுடியவில்லை என்ற டோனில் மன்னிப்பு கடிதங்களை கம்பெனிகள் வெளியிடுகின்றன. கடிதங்களை பார்க்க போட்டோக்களை SWIPE IT. நீங்கள் யாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதுவீங்க?
News November 8, 2025
இந்த தாவரங்களுக்கு விதை தேவையில்லை

சில தாவரங்கள் வளர விதைகள் தேவையில்லை. வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் மூலம் வளர்கின்றன. இதுபோன்று விதைகள் இல்லாமல் வளரும் சில தாவரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தாவரங்களுக்கு பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.


