India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி, குன்னூர் நடுநிலைப்பள்ளியில் ரூ.16 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு கட்டிடம் கட்டினால் மாணவர்கள் சத்துணவுக் கூடத்திற்குச் செல்ல அவதியடைவார்கள். எனவே அருகில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கட்ட கோரி மாற்றுத்திறனாளி முகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்த நிலையில் அதிகாரிகள் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
சிவகாசியில் மருத்துவக்கல்லூரி மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மக்களவையில் விதி 377 இன் கீழ் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் எழுப்பிய கோரிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சிவகாசியில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முறையான ஆய்வு செய்து பின்னர் அனுமதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
சிவகாசி மாநகராட்சியில் எதிர்வரும் 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 48 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை 2024 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செண்பகத்தோப்பு பேமலையான்கோவில் அருகே பொது இடத்தில் அனுமதியின்றி சீட்டு விளையாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், காமராஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 52 சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.21) வத்திராயிருப்பு ரங்காராவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 112வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கல்லூரிகள் தேர்வு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சார்பாக “போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை நவ.,15ஆம் தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் கையால் சான்றிதழ் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் நாளை (அக்.22) போதைக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சுள்ளங்குடி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு ரேஷன் கடை இல்லாததால் 3 கிமீ தொலைவிலுள்ள நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு கண்மாய் வழியாக முழங்கால் அளவு தண்ணீரில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுள்ளங்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராமலிங்காபுரம் பகுதியில் சவுடாம்பிகா ( 33), கோமதி (63), ராஜேஸ்வரி (53), விஜயா (65), மாலா (60), ஆகிய 5 பேர் அனுமதியின்றி வீடுகளில் கருந்திரி தயார் செய்து கொண்டிருந்தததெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 5 பெண்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 30 குரோஸ் கருந்திரி பறிமுதல் ஸ
விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேவர் ஜெயந்திக்கு செல்வோர் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குருபூஜைக்கு சொந்த வாகனங்கள் மூலம் செல்வோர் வாகன எண், செல்வோர் விவரங்களை 23ஆம் தேதிக்குள் போலீஸுக்கு தெரிவித்து வாகன அனுமதி சீட்டு பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாகன தணிக்கையின் போது வாகன உரிமையாளர் இருக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.