Virudunagar

News March 4, 2025

பட்டாசு தொழிலாளர்களின் கவனத்திற்கு

image

பட்டாசு விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என நவ.10ல் முதல்வர் அறிவித்தார். இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், 2024 நவ.10க்கு முன், பின் நிகழ்ந்த விபத்துக்களில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள், நவ.10 அன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 98659 58876, 93447 45064 எண்களை அணுகலாம் *ஷேர்

News March 3, 2025

தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு 

image

விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பாக அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில் வரும் 5 ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கடன் உதவி தேவைப்படும் தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

News March 3, 2025

+2 பொதுத்தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழகத்தில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் சிவகாசி வட்டம், திருத்தங்கல் சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் இன்று (03.03.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

News March 3, 2025

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆட்சியர் கடிதம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடிதம் ஒன்றை கைப்பட எழுதியுள்ளார். அதில், மாணவச் செல்வங்களே, இது முக்கியமான தேர்வு. அச்சமும் அவநம்பிக்கையும் நமக்கு அவசியமற்றவை. கவனமும் உழைப்பும் மட்டுமே வெற்றிக்கு அடிப்படை. 3 மணி நேரத்தையும் தேர்வறையில் சிறப்பாக பயன்படுத்துங்கள். முடிந்ததை முழுமையாகச் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன.விருதுநகர் மாவட்டத்திற்கு 46 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். <>இந்த லிங்கை கிளிக் செய்து<<>> உடனே விண்ணப்பியுங்கள்.விண்ணப்பம் திருத்தம் செய்ய அவகாசம் 06.03.25-08.03.25.

News March 3, 2025

வீட்டில் பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

image

சிவகாசி அருகே கொங்கலாபுரம் பகுதியில் போலீசார் நேற்று சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலை திருப்பதி நகரை சேர்ந்த சுரேந்திரபாபு என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சுரேந்திரபாபு உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்து சுமார் 5,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News March 3, 2025

டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 3, 2025

விருதுநகருக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் – அண்ணாமலை

image

அய்யா வைகுண்டரின் 193 ஆவது அவதார தினம் மார்ச் 4 அன்று கொண்டாடப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 2, 2025

பிளஸ் டூ தேர்வு எழுதும்  22,176  மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 தேர்வுகள் துவங்க உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 222 அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 22,176 மாணவ மாணவியர் இத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்களுக்காக 98 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்வு எழுத உள்ள 137 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 2, 2025

கனிமவள கொள்ளையில் 4 பேரின் பணியிடை நீக்கம் ரத்து

image

விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வேளாண் உதவி அலுவலர், நீர்வளத்துறை உதவி பொறியாளரின் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருவாய் துறையினர் 5 பேரில் தாசில்தார் ராமநாதன் தவிர மற்ற 4 பேரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு 17ஏ பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!