Virudunagar

News November 10, 2024

57,556 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர்

image

விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சார்பில் ரூ.417 கோடியே 21 லட்சம்  மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 10, 2024

புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

image

விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் ரூ.77 கோடியே 12 லட்சம் மதிப்பிலான புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம், நியாய விலை கடை கட்டிடம் உள்ளிட்ட 98 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 35 கட்டிடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

News November 10, 2024

விருதுநகரில் 138 தரை பாலங்கள் அமைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் 2,033 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பராமரிக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் 247 கிலோமீட்டர் சாலைகள் ரூ.261 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.314 கோடி மதிப்பில் 138 தரைப்பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

விருதுநகரில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், முதலமைச்சர் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 10, 2024

விருதுநகரில் 7 தொகுதிகளிலும் வெற்றி – ஸ்டாலின்

image

விருதுநகரில் கள ஆய்வு நடத்த 2 நாள் பயணமாக வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலின் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் 7-வது முறையாகத் திமுக ஆட்சி அமைக்க விருதுநகரின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுத் தருவோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதியளித்தார்கள்”என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தள பதிவிட்டுள்ளார்.

News November 10, 2024

கையில் டேட்டவுடன் முதல்வர் கேள்வி

image

விருதுநகரில் முதல்வர் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணி குறித்தும் ஆலோசனை நடத்தினார். 2026 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கட்சி நிர்வாகிகளின் கள செயல்பாடுகளை டேட்டாவுடன் கையில் வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 -வது முறையாக திமுக ஆட்சி அமைக்க விருதுநகரில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தருவோம் என நிர்வாகிகள் உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 9, 2024

கடைக்குச் சென்று கேக், பிஸ்கட்டுகள் வாங்கிய முதல்வர்

image

விருதுநகர் சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற வழியில் காப்பகத்தில் தங்கி உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக சூலக்கரை மேட்டில் உள்ள பேக்கரிக்கு சென்று கேக் மற்றும் பிஸ்கட்டுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாங்கினார். முதலமைச்சர் கேக் வாங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

News November 9, 2024

புதிய கட்சிகளை பற்றி கவலை வேண்டாம்? – முதல்வர்

image

விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் தலைமையில் திமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணியை உடைக்க கடும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை பற்றியும் புதிதாக கட்சி துவங்கியவர்களை பற்றி எதுவும் யோசிக்காமல் நீங்கள் களப்பணி ஆற்றுங்கள் அதனை நாங்கள் பார்த்து கொள்கிறோம். பலமான கூட்டணி உள்ளதால் 2026 நாம் வெற்றி பெறுவோம் என முதல்வர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 9, 2024

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க மணி கண்டெடுப்பு!

image

வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினாலான மணி நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, தங்க மணி அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News November 8, 2024

சாலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

image

ஸ்ரீவி அருகே டி.மானகசேரி பகுதியைச் சேர்ந்த பால்சாமி(55),வைரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை பைக்கில் மானகசேரியில் இருந்து சிவகாசி – ஸ்ரீவி சாலையில் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிவகாசியில் இருந்து ஸ்ரீவிக்கு வந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதியதில் பால்சாமி சம்பவ இடத்திலே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!