Virudunagar

News November 12, 2024

பட்டாசு உற்பத்தியில் இனி ரோபோக்கள்?

image

சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் அபாயகரமான இடங்களில் தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள் மூலமாக உற்பத்தி செய்யும் முயற்சியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிய தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்திக்கு வருகை இல்லாத காரணத்தினால் அனைத்து இடங்களிலும் இயந்திரமயமாக்க ஏற்பாடு நடைபெற்று கொண்டுவருகிறது. இதன் விளைவாக வரக்கூடிய காலங்களில் 90% சதவிகிதம் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது.

News November 12, 2024

ராஜபாளையம் இளைஞருக்கு தூக்கு தண்டனை

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் 2021 இல் மகள் உறவு கொண்ட 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்தான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டி நிரூபனமான நிலையில் அவருக்கு கேரள நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News November 11, 2024

கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

விருதுநகர் மாவட்டம் நள்ளி காலணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(52). இவர் இருசக்கர வாகனத்தில் உப்புத்தூர் விலக்கு அருகே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் செல்வக்குமார் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் கார் ஓட்டுனரான மும்பையைச் சேர்ந்த பாஸித்கஜா மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 11, 2024

விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் AAA பொறியியல் கல்லூரியில், இன்று(11.11.2024) மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் Young indians, சிவகாசி தன்னார்வு அமைப்பு இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 1098 குழந்தைகள் உதவி எண் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டார்.

News November 11, 2024

ரூ.47.50 கோடியில் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அதில் விருதுநகர் நகராட்சியில் ரூ.25 கோடி, அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.10.50 கோடி, காரியாபட்டி நகரத்தில் ரூ.12 கோடியில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அறித்துள்ளார்.

News November 11, 2024

மின்சாரம் தாக்கி மூன்று தொழிலாளர்கள் காயம்

image

விருதுநகரில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க ஆட்சியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை நேற்று மாலை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கொடி கம்பம் மின் கம்பியில் உரசியதில் பணியில் ஈடுபட்ட நாராயணசாமி, சக்திவேல், நவீன் குமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். தற்போது இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News November 11, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று(நவ.11) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகள் தினம் நவம்பர் 14 முன்னிட்டு காலை 9 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ‘குழந்தைகளுக்கான நடை’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

பல நாள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய முதல்வர்

image

விருதுநகர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின்  பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியது பட்டாசு தொழிலாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

News November 10, 2024

அருப்புக்கோட்டியில் ரூ 350 கோடியில் சிப்காட் பூங்கா

image

பட்டம்புதூரில் இன்று முதல்வர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பேசிய முதல்வர் அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா,விருதுநகர் நகராட்சியில் ரூ.24 கோடியில் சாலை, மழைநீர் வடிகால், சிவகாசி மாநகராட்சியில் ரூ.50 கோடியில் சாலை, மழைநீர் வடிகால், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் நகராட்சியில் ரூ.16 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை பராமரிக்க ரூ.10 கோடி 

image

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முடிவுற்ற 34 பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அதில் பேசிய முதல்வர் வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!