India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி அருகே கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பொன்னுச்சாமி (48). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி சம்பளப் பணத்தை மனைவிக்கு கொடுக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராமலட்சுமி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலடைந்த பொன்னுச்சாமி நேற்று அருகில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வத்திராயிருப்பு அருகே இலந்தைக்குளத்தில் பெண்கள் வெள்ளையுடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொம்மியம்மாள் என்ற பெண்,”என்னை நினைத்து வெள்ளையுடை அணிந்தால் நான் உங்களை காப்பேன்” என கூறியதால் பெண்கள் வெள்ளையுடை அணிந்து வருகின்றனர்.வெளியூரில் இருந்து திருமணமாகி வரும் பெண்களும் இதை பின்பற்றி வரும் நிலையில்,இங்கிருந்து வெளியூர் திருமணமாகி செல்லும் பெண்கள் வெள்ளை ஆடை அணிவதில்லை. புதுத்தகவல்னா ஷேர் பண்ணுங்க

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வுக்கு மாணவர்கள் 5857 மாணவிகள் 7965 என மொத்தம் 13 ஆயிரத்து 822 பேர் விண்ணப்பித்த நிலையில் 5804 மாணவர்கள், 7906 மாணவிகள் என 13 ஆயிரத்து 710 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 112 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் கணக்குப்பதிவியல் தேர்வில் 147 பேரும், புவியியல் தேர்வில் ஏழு பேரும் தேர்வில் பங்கேற்கவில்லை.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் இரண்டாவது மாடி சர்க்கரை நோய் பிரிவில் பாத மருத்துவ மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மருத்துவ மையத்தை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஜெய்சிங் திறந்து வைத்தார். மேலும் சர்க்கரை பாத நோய் வருவதற்கு முன்பாகவே கண்டறியும் பயோதிஸ்யோ மீட்டர் முறையை நோயாளியை வைத்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்.23 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயனாளிகள் தேர்வு மற்றும் திட்ட பணிகளை இறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு மார்ச்.29 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கடைசி பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர், மீசலூரை சேர்ந்த பாக்கியராஜ் மகன் வைஷ்ணவ் (9) அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மதியம் இவரது தாய் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் தட்டி பார்த்து திறக்காததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வைஷ்ணவ் கழுத்தில் தொட்டில் கயிறு இறுகி உயிரிழந்தார். இது குறித்து சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் செல்போனில் தேவையற்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 1 இயற்பியல் தேர்வு 6,519 மாணவர்களும் 8016 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 535 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில், 6411 மாணவர்களும் 7900 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 311 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 108 மாணவர்களும் 116 மாணவிகளும் என மொத்தம் 224 பேர் எழுதவில்லை என தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.03.2025) போக்குவரத்துத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.