India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶️மார்ச்.4 பாளையம்பட்டியில் அமரர் ஊர்தி ஓட்டுநர் கொலை.
▶️மார்ச்.5 ஜோகில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் கொலை.
▶️மார்ச்.5 தாயில்பட்டியில் மனைவியை எரித்து கொன்ற கணவர்.
▶️மார்ச்.8 தளவாய்புரத்தில் பாட்டியை கொன்ற பேரன்.
▶️மார்ச்.9 சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை.
▶️மார்ச்.17 சிவகாசியில் பழிக்குப்பழியாக வெட்டி கொலை.
▶️மார்ச்.26 மல்லாங்கிணறில் தாயுடன் தொடர்பில் இருந்தவரை குத்திக் கொன்ற மகன்.

விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் பெயரில் முகநூலில் போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர், “இந்தப் போலி ஐடி அடிக்கடி வரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. நண்பர்களே, விழிப்புடன் இருங்கள். இதற்கு கடுமையான நடவடிக்கைகளைச் எடுக்குமாறு முகநூலை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதே போல் போலி கணக்கு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. *போலி கணக்கை பின் தொடர்பவர்களுக்கு பகிரவும்

தமிழகத்தில் அண்மை காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை(மார்ச்.31) முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஏப்.2 அன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஏப்.5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகர் காந்தி நகரில் அரசு உதவி பெறும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக மீட்கப்பட்ட ஏழு சிறுமிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த 14 வயது சிறுமியும், 15 வயது சிறுமியும் திடீரென மாயமாயினர். இது குறித்து ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மீட்டனர்.

சிவகாசியில் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான பங்குனி பொங்கல் விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கி விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். இதில் ஏப்.6 அன்று பொங்கல் விழாவும், ஏப்.7 கயிறு குத்தும் விழாவும், ஏப்.9 தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதனால் சிவகாசி தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்.9,10 அன்று பெண்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற உள்ளது. கபடி போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9488151214, 9994511966, 9865071770 என்ற எண்ணிலும் கையுந்து போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் 9994160149, 9894693210 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.1.20 லட்சம் வழங்கப்படும்.

ஏழாயிரம்பண்ணை பகுதியில் போலீசார் நேற்று சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஸ்டாலின் பட்டாசு ஆலைக்கு பின்புறமாக சீமைக் கருவேல மரத்தடியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோத பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தாமோதரன் (30), திருநாவுக்கரசு (31) ஆகிய இருவரை கைது செய்து சுமார் ரூ.50,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை மக்கள் நம்பப் போவதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோவை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியை ஒப்பந்தம் எடுத்த மதுரை ராம் அண்ட் கோ முறையாக பணி செய்யாததால் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்த நகர் நல அலுவலர் சரோஜா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நேர்மையாக செயல்பட்ட நகர் நல அலுவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை (மார்ச்.30) இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 6 ஆம் தேதி பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மொட்டை அடித்து வழிபடுவர். அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு வேட்டைக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.
Sorry, no posts matched your criteria.