India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெம்பக் கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் சூது பவளம், கல்மணிகள், முத்திரைகள் உள்ளிட்டவை கிடைத்து உள்ளன. தற்போது, சுடுமண்ணால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் அணியக்கூடிய ஆபரணமான காதணி கிடைத்துள்ளது. மேலும் அயல் நாட்டுக்கு வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண் முத்திரைகள், வெவ்வேறு குறியீடுகளுடன் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மற்றும் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் குடியரசு தினமான ஜன.26 (நாளை) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை 35,416 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயன்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% அதிகமாகும். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வருடம் மட்டும் 8,259 நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். தாய்மார்கள் பிரசவம் 7463,இருதய நோயாளிகள் 2133 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர்.
சிவகாசி பசுமை மன்ற அமைப்பை சேர்ந்த ரவி அருணாச்சலம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிலை, சுற்றுச்சூழல், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகிறார். 2001ம் ஆண்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்த போது மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்காக ஆட்சியரிடம் விருது பெற்ற அவருக்கு வரும் குடியரசு தின விழா அன்று “நீர் பாதுகாவலர்” விருதினை மாவட்ட ஆட்சியர் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தை மாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 9 குழந்தை தொழிலாளர்கள், 31 வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1452 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.21 லட்சத்து 34 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருவது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு way2news செய்தி வெளி செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் பேரூராட்சி சேர்மன் உத்தரவின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பைப் லைன் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கேமராவில் சிறுத்தை சுற்றுத்திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ராஜபாளையம் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெருநாய்கள் கூட்டமாக துரத்துவதால் வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடர்ந்து நடக்கிறது. புதிய பஸ் நிலையம், சங்கரன்கோவில் முக்கு, மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று வரை தெரு நாய் கடித்ததில் 39 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தி 30, ஆடல் பாடல் இசை கச்சேரியில் பணி புரிகிறார். திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் உடன் பணிபுரியும் வேல்ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அந்த 10 வயது சிறுமியை காலில் சூடு வைத்து வேல்ராஜ் கொடுமைபடுத்தியுள்ளார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.