Virudunagar

News December 16, 2024

விருதுநகர் ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மனிதக் கழிவுகளை , மனிதர்களே அகற்றும் நடைமுறை தங்கள் மாவட்டங்களில் நடைமுறையில் இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பிரமான பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளட் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

News December 16, 2024

தவெக மீது நிதி அமைச்சர் மறைமுக விமர்சனம்

image

நேற்று ஆரம்பித்த கட்சி கூட தங்களுக்கு ஒரு பெரிய சக்தி இருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தவெகவை மறைமுகமாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார். சிவகாசியில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான டிஜிட்டல் பிரச்சார பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த அவர், கடந்த 4 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார்.

News December 16, 2024

எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை

image

எலி பேஸ்ட் என்ற மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த அங்கீகாரம் பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகள் தற்கொலைக்காக பொது மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த வகை மருந்துகள் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு நிரந்தரமாக தடை விதித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட எலி மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 16, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணி அளவில் திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டியானது விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வம் உடைய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

இளையராஜா விவகாரம் குறித்து அரசு தரப்பு விளக்கம்

image

இளையராஜைவை கருவறைக்குள் அனுமதிக்காத விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை இணை அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திருக்கோவிலில் மரபு வழக்கப்படி அர்த்த மண்டபம் உள்ளே செல்ல கோவில் அர்ச்சகர், மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை; இளையராஜா மண்டபம் வாசல் படியில் இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என ஜீயர் கூறியதை அவரும் ஒப்புக்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 16, 2024

இளையராஜா விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?

image

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.
இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்ற நிலையில், உங்களுடைய கருத்தினை COMMENT செய்யவும் .

News December 16, 2024

இளையராஜாவிற்கு கருவறை செல்ல அனுமதி மறுப்பு

image

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் ஜீயர்கள் சிலரும் பங்கேற்றனர்; பின் ஜீயர்களுடம் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு ஜீயர்களும், பக்தர்களும் கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.

News December 15, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (டிச.16) மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குறைத்திர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று (டிச.15) தெரிவித்துள்ளது.

News December 15, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள 9361613548, 8667573086 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் பரிசு ரூ. 2 லட்சம், 2ஆம் பரிசு 1.5 லட்சம், 3ஆம் பரிசு 1 லட்சம்.

News December 15, 2024

கடன் தொல்லையால் கணவன்,மனைவி தற்கொலை

image

ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்தவர் கணேசன்(45). கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி முத்துமாரி, மகள் குருபிரியா(15), மகன் சபரிநாதன்(13) ஆகியோருக்கு பூச்சி மாத்திரை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் முத்துமாரி உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசனும் உயிரிழந்தார்.

error: Content is protected !!