India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் இந்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனம் மற்றும் இண்டஸ்லேண்ட் வங்கியின் உதவியுடன் நிதி சார்ந்த பொருளாதார பயிற்சி இலவசமாக வழங்குகிறது. மாவட்டத்தின் முக்கிய கிராமங்களுக்கு பயிற்சி மைய வசதி கொண்ட சொகுசு பேருந்தில் வைத்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் 97514 80830, 88079 94371, 90920 71373 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே குண்டாயிருப்பு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேன்சி ரக பட்டாசுகள் உரிய அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் பட்டாசை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமுகம், ஆதவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டில் இருந்து 100 கிராமிய கரகாட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து புலியூரான் கந்தசாமி, சிவகாசி அழகேஸ்வரன், சிவகாசி கனகராஜ், திருத்தங்கல் கார்த்தீஸ்வரன், வந்திராயிருப்பு பாபு, திருச்சுழி புலிக்குறிச்சி அபர்ணா ஆகியோர் கரகாட்ட கலைஞராக பங்கேற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழர்களுக்கு எதிரான நிலை கொண்ட ஆளுநர் தேனீர் விருந்தில் பங்கேற்காமல் இருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பாராட்டியுள்ளார். தொடர்ந்து ஆளுநர் தமிழக அரசிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் எண்ணற்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சுடு மண்ணால் ஆன மண் குடுவை மற்றும் பொம்மை கால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 3ம் கட்ட அகழாய்வில் 3000க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
விருதுநகர் : தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பில்: விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணியில் ஈடுபடுத்திய 48 கடைகள், நிறுவனங்கள், 36 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 89 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்த ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ்’ நிறுவனர் R.G.சந்திரமோகனுக்கு தொழில் வர்த்தகத்தில் சிறந்து விளங்கியதற்காக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் எளிய பின்னணியில் இருந்துவந்து, பால் பண்ணைத் துறையில் ஒரு தலைவராக உயர்ந்து தனது சாதனைகளுக்கு தகுதியான விருதை பெற்றுள்ளதாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தன் X தளத்தில் வாழ்த்தியுள்ளார்.
ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தை மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் தை மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நல்லதங்காள் சிலையை சேதப்படுத்தி உண்டியல் மற்றும் பீரோவை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.இதனையடுத்து அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோசமிட்டனர்.பின்னர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.