India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி, வணிகவரி, தொழில் வரி, குப்பை, குடிநீர் வரி என ஆண்டுக்கு 36 கோடி வசூலாகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டிற்கான வரி வசூல் இதுவரை 17 கோடி 91 லட்சம் ரூபாய் வரை அதாவது 49% வசூலாகி உள்ளதாகவும் மீதமுள்ள 51% வரியை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் காலதாமதமின்றி வரி செலுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று இரவு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை போலீசார் ஆலையின் உரிமையாளர்களான சண்முகையா (60), அவரது மகன் ஜெய்சங்கர் (40) ஆகிய இருவர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கடம்பன்குளம், கிழவனேரி மற்றும் மாங்குளம் பகுதிகளில் இன்று (ஜன.29) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரியாபட்டியில் உள்ள சேது பொறியியல் கல்லூரியில் வேளாண்மை – உழவர்சந்தை சார்பில் மாவட்ட அளவிலான காய்கறிகள் திருவிழா இன்று(ஜன.29) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைக்கும் இவ்விழாவில் வேளாண்மை பல்கலை கழக விஞ்ஞானிகள், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் சகோதரதுறை அதிகாரிகள் கலந்து கொண்டு தொழில்நிட்ப உறையாற்ற உள்ளனர். எனவே விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன் பெறலாம். SHARE IT
வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று பணி முடிந்து செல்லும்போது மிஞ்சிய பேன்சி ரக பட்டாசு ரசாயன கலவையை தயாரிப்பு அறையில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். வேதியியல் மாற்றத்தால் அவை வெடித்து சிதறியதில் ஒரு அறை சேதமானது. தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விருதுநகர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காவலர் விசாலி. இவர் தனது கணவர் அஜித்குமார் என்பவருடன் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த வாகனம் மோதியதில் விசாலி படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கருப்பசாமி என்பவர் மீது வழக்கு பதிவு.
வெம்பக்கோட்டை அருகே கழுகுமலை செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட தகர செட் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்த கனஞ்சாம்பட்டியை சேர்ந்த குருவையா (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு வைத்திருந்த சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இந்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனம் மற்றும் இண்டஸ்லேண்ட் வங்கியின் உதவியுடன் நிதி சார்ந்த பொருளாதார பயிற்சி இலவசமாக வழங்குகிறது. மாவட்டத்தின் முக்கிய கிராமங்களுக்கு பயிற்சி மைய வசதி கொண்ட சொகுசு பேருந்தில் வைத்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் 97514 80830, 88079 94371, 90920 71373 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.01.2025) காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்மாணவர்களுடனான 150 ஆவது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஜோகில்பட்டியை சேர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கலந்துரையாட உள்ளார்.
தாட்கோ மூலமாக 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சி முடிந்த பிறகு ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக வேலை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.