Virudunagar

News February 3, 2025

WAY2NEWS செய்தி எதிரொலியாக பேருந்து இயக்கம்

image

சிவகாசி, சாத்தூர் பகுதிகளுக்கு தாயில்பட்டி வழியாக இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என WAY2NEWS செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக சிவகாசியிலிருந்து இரவு 9.20-க்கு இயக்கப்படும் பேருந்து நேற்று முதல் 10 மணிக்கு தாயில்பட்டிக்கு  வழியாக சாத்தூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.

News February 2, 2025

சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை

image

ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தை மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News February 2, 2025

ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை

image

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.20 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்காமல் தாமதப்படுத்துவது ஏன்? என பாமக கேள்வி எழுப்பியுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க சுவரொட்டி ஒட்டி வலியுறுத்தியுள்ளனர்.

News February 2, 2025

பட்டாசு தொழிலாளர்களின் கல்வி செலவு – அரசாணை வெளியிடுக

image

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வரின் அறிவிப்பின் படி அரசாணை வெளியிட வேண்டும் என தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அச்சங்க தலைவர் தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி ரூ.20 லட்சம், பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News February 2, 2025

விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல்

image

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா மார்ச்.16 அன்று தொடங்கி ஏப்.4 வரை நடைபெற உள்ளது. அதில் மார்ச்.16 அன்று பொங்கல் சாட்டுதல், மார்ச்.10 கொடியேற்றம், ஏப்.6 பங்குனிப் பொங்கல், ஏப்.7 கயிறுகுத்து, அக்னிசட்டி, ஏப்.8 தேரோட்டம், ஏப்.9 தேர்தடம் பார்த்தல், ஏப்.10 மஞ்சள் நீரோட்டம், ஏப்.13 திருவிழா நிறைவு பெறுகிறது.

News February 2, 2025

கல்லூரி மாணவர்கள் 85 பேருக்கு பணி ஆணை

image

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் பயிற்சி மற்றும் பணி அமர்வு மையத்தின் சார்பில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் சார்பில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் 255 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்காணல் முடிவில் 85 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News February 2, 2025

புரோட்டா மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(55). புரோட்டா மாஸ்டர் ஆன முத்துராஜ் தனது வீட்டில் இருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தார் முத்துராஜை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ம.ரெட்டியபட்டி போலீசார் நேற்று பிப்.1 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

News February 2, 2025

கடை இடித்த அதிகாரிகள் மீது புகார்

image

ஶ்ரீவி.கீழரதவீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் உள்ள கடையை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியை இடித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில்,நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் புகார் அளித்துள்ளார்.

News February 1, 2025

கடை இடித்த அதிகாரிகள் மீது புகார்

image

ஶ்ரீவி.கீழரதவீதியில் இருந்து அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு செல்லும் தெரு நுழைவுப் பகுதியில் உள்ள கடையை நகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் முன் பகுதியை இடித்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் கையகப்படுத்திய அக்கடையை இடித்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் சார்பில்,நகர் காவல் நிலையத்தில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் புகார் அளித்துள்ளார்.

News February 1, 2025

விருதுநகர் வடமேற்கு த.வெ.க நிர்வாகிகள் நியமனம்

image

தமிழக வெற்றி கழகத்தின் புதியதாக மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் வடமேற்கு மாவட்ட செயலாளராக மாரிச்செல்வம், இணைச் செயலாளராக பாலமுருகன், பொருளாளராக செந்தில்பிரபு, துணைச் செயலாளராக ரோஸ்பாண்டியன், அகல்யா உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!