Virudunagar

News January 8, 2025

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான கணினி தெருவில் பங்கேற்க மாவட்டத்திலிருந்து 340 தேர்வுகள் விண்ணப்பித்தனர். இதற்காக காரியாபட்டி வெம்பக்கோட்டை சிவகாசி ராஜபாளையம் என மொத்தம் 4 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 247 பேர் பங்கேற்றனர். இதில் 93 பேர் பங்கேற்காமல் அபசென்ட் ஆகினர்.

News January 8, 2025

விருதுநகரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலை நாடுபவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியர் உத்தரவு

image

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அருப்புக்கோட்டை நகராட்சிக்குள் சாலைகள் மற்றும் முக்கிய தெருக்களில் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.‌ இந்த ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.‌ ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

விருதுநகர் அதிமுக சார்பில் நூதன பிரச்சாரம் 

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் யார் அந்த சார்? என்பது விடை தெரியா வினாவாக உள்ளதை கண்டித்து அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக வாகனங்களில் யார் அந்த சார்? என்ற ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரத்தை திருத்தங்கல்லில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

News January 8, 2025

விருதுநகர் அருகே ஆறு பேர் மீது வழக்குப்பதிவு 

image

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் உள்ள பொது கலையரங்க மேடைக்கு அருகே அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த முத்துராஜ்,விக்னேஷ்,ராம்மூர்த்தி, முத்தையா,வெள்ளிமலை,கந்தசாமி ஆகிய ஆறு பேர் மீது வழக்கு பதிந்து அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரை  அகற்றினர்.

News January 8, 2025

விருதுநகரில் 403 கடைகளுக்கு சீல்

image

விருதுநகரில் புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கும் நோக்கில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் 6 குழுக்களாக இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில் 01-01-2024 முதல் 31-12-2024 வரை 831 முறை சோதனை மேற்கொண்டதில் 403 கடைகள், 44 வாகனங்கள், 1531 கிலோ 091 கிராம் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 403 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.1,06,16,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

எண்ணைக்காப்பு உற்சவத்தின் முதல் நாளில் ஆண்டாள்

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.இதனைத் ஆண்டாள் புறப்பட்டு மாடவீதி வழியாக திருமுக்குளம் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து முதலாம் நாளான இன்று எண்ணைக் காப்பு உற்சவம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

News January 7, 2025

ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு விநியோகம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகார்களுக்கு 04562-252680, 04562-252016 என்ற எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

image

இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் மெடிக்கல் அஸிஸ்டெண்ட் தேர்வுக்கு திருமணம் ஆகாதவர்கள் 07.01.2025 முதல் 27.01.2025 வரை https://agnipathvayu.cdac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதில் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலத்தில் 50 % தேர்ச்சி அல்லது 3 வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50% அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 % தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News January 7, 2025

வில்வத்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி மொட்டமலை பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஸ்ரீவி.மகாத்மா வித்யாலயா பள்ளியிலிருந்து 26 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர், முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

error: Content is protected !!