India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27,804), சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விருதுநகர் மாவட்ட மேம்பாட்டு பிரிவு சார்பாக அறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் இடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்கிய இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தால், பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபடுவது குறித்த பயிற்சி வகுப்பு வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. 20 முதல் 24ஆம் தேதி வரையிலும், 27 முதல் 31-ஆம் தேதி வரையிலும் தினந்தோறும் காலை 10.15 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். *ஷேர்
சிவகாசி அருகே உசேன் காலனி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக குடோன் ஒன்றில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடோன் உரிமையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை குலசேகரநல்லூர் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக மண்மனம் மாறாத கிராமிய பொங்கல் திருவிழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்ஜெயசீலன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சிக்கு வருகை தந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவருடன் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விருதுநகர் மருத்துவ கல்லூரியில் ஆட்சியர் தலைமையில் ஜன.25 அன்று காலை 9 மணி முதல் மாநில அளவில் ‘இந்திய தேர்தல்கள்” என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜன.20 க்குள் https://virudhunagar.nic.in/nvd-quiz-2025 இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட்டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 31ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. இதில் 4ஆம் நாளான இன்று முத்தங்கி சேவை திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் பொது பெட்டியில் விருதுநகர் ரயில்வே போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கிருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை ரயிலில் கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (10.01.24) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 2024- 25 ஆம் ஆண்டு சாகுபடி செய்த கருமை அரவைக்கு சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலை, தேனி ராஜா ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆகிய இரு ஆலைகளுக்கு அனுப்பி விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.