Virudunagar

News January 22, 2025

பைக் வாங்க டாடா ஏசி வாகனத்தை திருடிய 3 பேர் கைது

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தனியார் மினரல் வாட்டர் டேங்கர் டாடா ஏசி வாகனத்தை திருடி உடைத்து விற்பனை செய்து விலை உயர்ந்த டூவீலர் வாங்குவதற்காக கடத்திச் சென்றனர். இதில் காரியாபட்டி பனிக்கனேந்தலை சேர்ந்த அஜய் (24), அருண்பாண்டியன் (23), பிச்சம்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24) ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்து காரியாபட்டி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News January 22, 2025

சிறை நிரப்பும் போராட்டத்தில் 190 மாற்றுத் திறனாளிகள் கைது

image

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திராவபை் போல் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 முதல் 15 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதில் 190 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த போராட்டத்தில் 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

News January 21, 2025

முதல்வர் மருந்தகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் – ஆட்சியர் 

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படும். அதன்படி விருதுநகரில் மருந்தகம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜன.24 க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

சிவகாசியில் விரைவில் சுற்றுவட்ட சாலை

image

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய நகரத்தில் பெரும் அச்சுறுத்தலாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனை குறைக்க அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட சுற்றுவட்ட சாலை அமைக்கும் திட்டம் முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்றுள்ளதால் பணிகள் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 21, 2025

முன்னாள் அமைச்சர் பதிலளிக்க உத்தரவு

image

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் மேல்விசாரணை கோரி நல்லதம்பி தாக்கல் செய்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2025

விருதுநகரில் நாளை முதல் வேளாண் கண்காட்சி: ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 22.01.2025 முதல் 01.02.2025 வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இதில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைந்திடுமாறு ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 21, 2025

விருதுநகரில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம்

image

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராத) 1 பணியிடமும், சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர் 2 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு வயது 42 க்குள் இருக்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன. 27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

News January 21, 2025

இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகரில் மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மாதம் ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

இன்ஸ்டாகிராம் நண்பர்கள் செய்த செயல்!

image

சிவகாசி சாத்தூர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர் குடும்ப வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் 12,500 ரூபாய் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிவகாசி இன்ஸ்டாகிராம் நண்பர்கள் ஒன்றிணைந்து உதவி கோரிய மாணவிக்கு 12,500 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தி மாணவிக்கு உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 20, 2025

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சியில் வருகின்ற 26.1.2025 குடியரசுதின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவீனம் குறித்தும், ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!