India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் மொத்த வியாபாரிகள் பட்டாசு வாங்க குவிந்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி முன்கூட்டியே வரும் நிலையில் அதிக அளவிலான வெடி விபத்து விபத்தின் காரணமாக நடைபெற்ற ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பட்டாசு 30% வரை விலை உயர வாய்ப்புள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் 318 மாணவர்களுக்கும், சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 பள்ளிகளில் 4982 மாணவர்களுக்கும், 5 நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் 101 பள்ளிகளில் 15,072 மாணவர்கள் என மொத்தம் 144 பள்ளிகளில் 23,242 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இதே போல் 1200 அரசுப் பள்ளிகளில் 69,333 மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – ரூ.64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<

விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சரண் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி காஷ்மிரில் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 11 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கணினி, தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பட்டம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று(ஆக.25) இரவு 10 மணிக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த பாண்டி(33) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். டிரைவர் பாண்டி குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்த நிலையில் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.