India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீவி.பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை திவ்யா என்ற யூடியூபர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாக திவ்யா,சித்ரா,ஆனந்தராமன், கார்த்திக் ஆகிய 4 பேரை ஸ்ரீவி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் சித்ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை ஸ்ரீவி.போக்சோ நீதிமன்றத்தில் பிப்.8 அன்று நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வள்ளலார் நினைவு தினமான வரும் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் மதுபான உரிமை ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், புல்வாய்க்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 14 மாணவ மாணவியர்களுக்கு வயிற்று வலியும் வாந்தியும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் சத்துணவு உதவியாளர் கருப்பாயி என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16 கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டது. மேலும் 2025 ஜனவரி 5ல் முடிக்க திட்டமிடப்பட்டு விடுபட்ட கால்நடைகளுக்கு செலுத்துவதற்காக 21 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பு ஊசி 1,75,773 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 ஆயிரம் கால்நடைகள் பயன்பெறும்.
அல்லம்பட்டியை சேர்ந்த முனீசுவரியின்(27) 3 மாத குழந்தை ஹரிஹரசுதன் இரவில் அழுததாகவும், உடனே முனீசுவரி தாய்ப்பால் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் காலையில் பார்த்த போது குழந்தை அசைவற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாய்ப்பால் கொடுத்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
வத்திராயிருப்பு அருகே இலந்தகுளத்தை சேர்ந்தவர் செந்தில் முருகன் (32). இவர் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். நத்தம்பட்டி போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 210 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், எங்கிருந்து கஞ்சாவை கொண்டு வந்து விற்பனை செய்தார் என விசாரித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமலிங்கா மில்ஸ் பிரை வேட் லிமிடேட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் பெறப்பட்டது. அதில் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக அதன் நிறுவனர் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் முதலீடு செய்து புகார் அளிக்காதவர்கள் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் 2023 இல் மாணவரை கண்டித்ததற்காக ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பள்ளிகளில் ஒழுக்க கமிட்டிகளை ஏற்படுத்த அப்போதைய சி.இ.ஓ வளர்மதி உத்தரவிட்டார். தற்போது சமூக வலைதளங்களில் மாணவர்கள் ஜாதி தொடர்பாக பதிவிடுவது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்க கமிட்டிகள் முழு வீச்சில் செயல்படுத்தி அதை கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 6380079317 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசேஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.