India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் 51,681 பயனாளிகள் பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவ நிதித் தொகையினை பெற்று வருகின்றனர். ஆனால் 22,258 விவசாயிகள் மட்டுமே தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் இ-சேவை மையங்களில் தங்களின் நில உடமைகளை இலவசமாக பதிவு செய்யலாம். மீதமுள்ள 29,423 விவசாயிகள் மார்ச்.31க்குள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நெடுகனேந்தல் பகுதியை சேர்ந்த கரி வியாபாரியான செந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவால், கத்தி போன்ற ஆயுதங்களால் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து செந்திலை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று ஜெயலட்சுமி,சந்திரசேகரன், ஜெயசீலன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜனவரி 2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையுடன் கூட்டாய்வுகள், சைல்ட் லைன் புகார்களின் அடிப்படையில் உணவு கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளில் ஆய்வு செய்ததில் 2 குழந்தை தொழிலாளர்கள் 10 வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைட்டல் பார்க் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் 6620 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரத்தன்று தான் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளுவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு மாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு நந்தவனத்தில் ஆண்டாள் எழுந்தருளினார். இதனையடுத்து சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். இது நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் ஆகும். விருதுநகர் மக்கள் பட்ஜெட்டை அறிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 9.30 மணி முதல் LED திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தமிழக அரசு உருவாக்கிய தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில் 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93601-71161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி பூமிநாதன். இவர் தன்னுடைய தோட்டத்தில் விளையும் சுரைக்காய்களை நன்கு முற்றவிட்டு பறவைகளுக்கான கூடுகள் தயார் செய்து விற்று வருகிறார். பறவைகளுக்கு வாழ்விடம் அளிக்கும் கூடுகளாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதாக சொல்கிறார் விவசாயி பூமிநாதன். இதன் மூலம் மாதம் ரூ.1.50 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.*விவசாயிகளுக்கு பகிரவும்
விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சித்தலைவர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (மார்ச்.19) அன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்
காரியாபட்டி அருகே மு.ராணுவ வீரர் துரைப்பாண்டி(62) (மார்ச்.1) காணாமல் போன புகாரின் விசாரணையில், துரைப்பாண்டி கார் வாங்கியதில் கூடுதல் கமிஷன் பெற்ற பாண்டி(28), ராம்குமார்(27) இருவரையும் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின், தார் குடோனுக்கு துரைப்பாண்டியை வரவழைத்து, இருவரும் சேர்ந்து தாக்கி, அவரது உடலை தார் தொட்டிக்குள் போட்டு தீயிட்டுள்ளனர். இருவர் கைத செய்தனர்
Sorry, no posts matched your criteria.