India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் சின்னவாடியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும் விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு யூனியன்களில் பணிபுரியும் எட்டு பிடிஓக்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சிவகாசி பிடிஓவாக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் பிடிஓ ஜெயராமன் காரியாபட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் பிடிஓ ராமமூர்த்தி வத்திராயிருப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி அருகே இனாவிலக்கு மதுநாதபேரி குளம் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் மர்ம கார் ஒன்று அப்பகுதியில் சென்றது தெரியவந்தது. அதில் சிவகாசியை சேர்ந்த இளம்பெண்னை அவரது கணவர் கொலை செய்து காரில் தென்காசி கொண்டு வந்து எரித்தது தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் கீழ ராஜகுலராமன் அருகே பழைய சென்னிகுளத்தை சேர்ந்தவர் பாண்டி சுரேஷ். இவரது மகனான பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பாண்டியராஜா வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை தானாகவே இயக்கிக் கொண்டு அட்டை மில் முக்கு ரோட்டிற்கு சென்றார். அப்போது நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பாண்டியராஜா பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரம் பகுதியில் கனிம வளக் கொள்ளையை தடுக்கத் தவறிய சாத்தூர் தாசில்தார் உள்ளிட்ட 4 வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் மற்றும் வேளாண்மை துறை உதவி வேளாண் அலுவலர் உள்ளிட்ட 7 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்சரிக்கையை மீறி செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மை அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி,பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், கோவில்புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி சத்தியபிரபு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே இரு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகாசி வீரலட்சுமி(35)என்ற பெண் தொழிலாளி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் அவரது சகோதரி கஸ்தூரி உள்ளிட்ட 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் 94440-42322, 04562-225255 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகையை மாற்றம் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் பிப்.15 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.