India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் சின்னகுட்ட மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார் சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் ஏசுதாஸ், மாரிமுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக இந்த சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து காத்திருந்த நிலையில் இன்று கிடைத்துள்ளது. சம்பா வத்தல் விருதுநகரின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும், இதுவரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கு 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கந்தக பூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தர்பூசணி விற்பனை மந்தமாகி தேக்கமடைந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மீண்டும் தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திண்டிவனத்திலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தர்பூசணி கிலோ ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டான்செம் நிறுவனம் சார்பில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் வீரசோழன் அமீன் திருமண மண்டபத்தில் ஏப்.9 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர், அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள், கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 86818-78889, 95148-38485 இல் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகலாம்.
ஸ்ரீவி ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருக்கல்யாண திருவிழா இன்று(ஏப்.3) காலை 10.35 க்கு மேல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்க உள்ளது. ஏப்.11 ஆம் தேதி காலை செப்புத் தோரோட்டமும், இரவு இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வட்டார உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இராஜபாளையம் 97863-36396, 76959-53836 சிவகாசி 90425-19911 ,94420-58126 விருதுநகர் 98434-81831 ,97151-09134 என்ற உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர், செயலாட்சியர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் “தங்கத்தால் செய்யப்பட்ட மணி” ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.