Virudunagar

News March 6, 2025

செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்

image

விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் ஜன.2025 வரை செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 76,000 தாண்டியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.1.30 லட்சம் வரை வரி சலுகை வழங்கப்படுகிறது. மார்ச்.2025 வரை மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி முகாம்களில் பங்கேற்று கணக்கு துவங்கி பயன்பெறலாம் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

வெம்பக்கோட்டை, தாயில்பட்டியில் மனைவி முனீஸ்வரியை எரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் பொன்னுசாமி நேற்று தப்பி சென்றார். பின்னர் பொன்னுசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கொலை முயற்சியின் போது 40% தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த போலீசார் அவரை கைது செய்து காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News March 6, 2025

தேசிய அளவில் சாதனை படைத்த ஸ்ரீவி எஸ்.ஐ

image

ஸ்ரீவி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணமூர்த்தி(55). (சிவகாசி)ஈஞ்சார் நடுவப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர். இவர் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார். நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த தேசிய மூத்தோர் தடகள 5ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் பங்கேற்று 30.27 நிமிடங்களில் நடந்து முதலிடம் பெற்றார். *ஷேர்

News March 5, 2025

பிளஸ் 1 தேர்வை 22,178 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 45 மையங்களில் 4425 மாணவர்கள், 5178 மாணவிகள் என 9603 மாணவ மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். மேலும் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 மையங்களில் 577 மாணவர்கள்,6798 மாணவிகள் என 12,575 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தேர்வு மையங்களில் 98 முதன்மை கண்காணிப்பாளர்கள், 98 துறை அலுவலர்கள், 7 பறக்கும் படை குழுவில் 28 உறுப்பினர்கள் உள்ளனர்.

News March 5, 2025

மருத்துவமனை கட்டுவதாக மோசடி 

image

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

News March 5, 2025

விருதுநகரில் ரூ.1.26 லட்சம் திருட்டு

image

விருதுநகர் அருகே பாவாலி நடுத்தெருவை சேர்ந்தவர் லெக்கன். இவர் வீட்டில் இருந்த 38,000 திருடுபோனதில் சிசிடிவி பாதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் அல்லம்பட்டியை சேர்ந்த ஸ்ரீராம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இதற்கு முன் ரூ.88,000 திருடியதும், இதே போல் பலமுறை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஆமத்தூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News March 5, 2025

வாசனை திரவிய தொழிற்சாலை அமையுமா?

image

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, மேட்டு தொட்டியாங்குளம், செம்பட்டி, குறிஞ்சாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் மல்லிகை தடிமனாகவும், அதிக வாசனையாகவும் உள்ளது. எனவே அருப்புக்கோட்டையில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து பூவுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News March 4, 2025

விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் சிலர் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விபரங்களை வழங்காமல் உள்ளனர். அவர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

அருப்புக்கோட்டையில் சிப்காட் துவக்கம் எப்போது?

image

அருப்புக்கோட்டையில் 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ 350 கோடியில் சிப்காட் அமைக்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் அறிந்திருந்தார். இதற்காக நிலங்களை தேர்வு செய்யும் பணி வருவாய் துறை மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை விரைவு படுத்தி சிப்காட் அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது‌.

News March 4, 2025

எம்.பி. மாணிக்கம் தாகூர் மனு தள்ளுபடி

image

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதில் சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி சதீஷ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!