Virudunagar

News March 7, 2025

விருதுநகரில் நாளை மாரத்தான் போட்டி

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை(மார்ச்.8) காலை 6 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நெடுந்தூர ஓட்டம்(மாரத்தான்) நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.30,000, ரூ.25,000, ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். மேலும் விவரங்களுக்கு 99443 34380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News March 7, 2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் வரும் மார்ச்.18 அன்று நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக வருவாய் கோட்டாட்சியர்களிடம் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

பிளஸ் டூ ஆங்கிலத் தேர்வில் 339 பேர் ஆப்சென்ட்

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் டூ ஆங்கில தேர்வில் 339 பேர் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் டூ ஆங்கிலத் தேர்வில் 10,264 மாணவர்கள், 11,910 மாணவிகள் என 22,174 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,084 மாணவர்கள் 11,751 மாணவிகள் என 21,835 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 339 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 7, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மார்ச்.11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. வரும் 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. *மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

சிவகாசி பங்குனி பொங்கல் விழா தேதி அறிவிப்பு

image

சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா இவ்வாண்டில் வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. ஏப்.06 தேதி பொங்கல் விழாவும், ஏப்.07ம் தேதி கயிறு குத்து விழாவும், ஏப். 08ம் தேதி தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது. *ஷேர்

News March 7, 2025

ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

image

ராஜபாளையம் ஸ்டாண்டர்ட் பாலிமர்ஸ் பிளாஸ்டிக் நிறுவன குடோனில் நேற்றிரவு 8:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இயந்திரங்கள், மூலப்பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள், மினி வேன் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 6, 2025

விருதுநகரில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறை தீர்வு முகாம் நடைபெற உள்ளது. அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் மார்ச்.8 அன்று நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

விருதுநகரில் நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்

image

சாத்தூரை சேர்ந்த வரதராஜ பெருமாளிடம் திருவாரூரை சேர்ந்த 29 வயதுள்ள இளம்பெண் முகநூலில் பழகி அடிக்கடி வரதராஜ பெருமாளிடம் பணம் கேட்டுள்ளார். பின்னர் அப்பெண் அரைகுறை ஆடையுடன் தோன்றி இவரையும் அரைகுறை ஆடையுடன் இருக்க செய்து Screen Short எடுத்து அவரது மனைவிக்கு அனுப்புவதாக கூறி பணம், 80 பவுன் நகையை பெற்ற நிலையில் போலீசார் அப்பெண்னை கைது செய்து இவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.61 லட்சத்தை முடக்கியுள்ளனர்.

News March 6, 2025

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மார்ச்.10 அன்று விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700 முதல் ரூ.13500 வரை வழங்கப்படும். மேலும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.

News March 6, 2025

நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்

image

விருதுநகரில் அமைந்துள்ள அருள்மிகு பாரசக்தி அம்மன் பங்குனி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் 21 சட்டி, 51 சட்டி, 101 சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்த சட்டி தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தான அலுவலகத்தில் முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம் என விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!