Virudunagar

News March 9, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி வெட்டி கொலை

image

சிவகாசி முருகன் காலனி சாலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலை அருகில் இன்று சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியுடன் மாரிமுத்து என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக அவரை சில நாட்களுக்கு முன் கருப்பசாமி கண்டித்த நிலையில் அவர் தலைமையிலான கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகம்.

News March 9, 2025

விருதுநகரில் வெளுத்து வாங்க போகும் கனமழை

image

தமிழ்நாட்டில் நாளை (மார்ச்.10) முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதில் மார்ச்.11 அன்று விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 9, 2025

விருதுநகரில் ரூ.3.75 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

image

திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவர் விருதுநகர் மாவட்டத்தில் கலால் வரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் மது விற்பனை செய்வதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அப்போது சத்திரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே இவரது காரை சோதனையிட்டத்தில் அதில் தனியார் மது விற்பனைக்கூடங்களிலும்,மெத்தனால் ஆய்வகங்களிலும் லஞ்சமாக பெற்ற ரூ.3.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News March 9, 2025

விருதுநகரில் மாணவர் தற்கொலை

image

விருதுநகர் மாவட்டம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாரிமுத்து. இவர் விருதுநகர் அடுத்த சூலக்கரையில் ஐடிஐ படித்து வந்தார்.சரியாக படிக்காமல் மது அருந்தி வந்தவரை பெற்றோர் கண்டித்தனர்.இநநிலையில் மாரிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 9, 2025

முன்னாள் படை வீரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு, முதல்வரின் காக்கும் கரங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் படையில் பணிபுரிவோர்களை சார்ந்தோருக்கான குறைதீர் நாள் கூட்டம் மார்ச்.18 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 8, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,408 வழக்குகளுக்கு தீர்வு

image

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை உள்பட 4948 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் சுமார் 2408 வழக்குகளுக்கு ரூ.11,29,65,571 தீர்வு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 8, 2025

மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம்

image

விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படவுள்ளது. இம்மையம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த மார்ச்.26 அன்று முதல் செயல்படும். இதில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.

News March 8, 2025

அமைச்சர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கின் வாய்தா நேற்று இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு காரணமாக வழக்கின் விசாரணையை ஏப்.4 க்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

விருதுநகரில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.

News March 8, 2025

விருதுநகரில் ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன்கள் தேவை

image

மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில் வழித்தடங்களில் ‘ஹால்ட்’ ரயில்வே ஸ்டேஷன்கள் ஏற்படுத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மதுரை – செங்கோட்டை வழித்தடத்தில் விருதுநகர் தமிழ்நாடு ஓட்டல் அருகே ஒரு ஹால்ட் ரயில்வே ஸ்டேஷன் ஏற்படுதினால் தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவி, சிவகாசி பகுதி மக்கள், அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலம் எளிதாக வந்து செல்வார்கள். SHARE செய்யவும்.

error: Content is protected !!