India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயர் சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று 20.03.2024, இரவு, பங்குனி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளில் பெருமாள் பெரிய திருவடியான கருடனின் வாகனத்தின் மீது ராஜா கம்பீரமான அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகருக்கும் பாஜகவில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் பேசப்படுகிறது. எனவே ஸ்டார் தொகுதியாக இங்கு பிரச்சாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், மத்திய சென்னை, திருச்சி மக்களவை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகரன் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வழங்கியுள்ளார்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலுக்கு வேட்புமனு 20.03.2024 முதல் 27.03.2024 வரை 23.03. 2024 சனிக்கிழமை மற்றும் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்கள் தவிர்த்து தாக்கல் செய்யலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு சமூக வலைதளங்கள் மூலமாக உண்மைக்கு புறமாக செய்தி வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று(மார்ச்.19) தெரிவித்துள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
Sorry, no posts matched your criteria.