Virudunagar

News December 15, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி – ஆட்சியர் அறிவிப்பு

image

குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள 9361613548, 8667573086 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் பரிசு ரூ. 2 லட்சம், 2ஆம் பரிசு 1.5 லட்சம், 3ஆம் பரிசு 1 லட்சம்.

News December 15, 2024

கடன் தொல்லையால் கணவன்,மனைவி தற்கொலை

image

ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்தவர் கணேசன்(45). கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி முத்துமாரி, மகள் குருபிரியா(15), மகன் சபரிநாதன்(13) ஆகியோருக்கு பூச்சி மாத்திரை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் முத்துமாரி உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசனும் உயிரிழந்தார்.

News December 15, 2024

சிவகாசியில் ரூ.89,000 அபராதம் வசூல்

image

சிவகாசியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சாலையில் சுற்றித் திரிந்த 35 மாடுகளை சப் கலெக்டர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இதுவரை 21 மாடுகளுக்கு மொத்தம் ரூ.89,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாடுகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கன்றுகள், கோயில் மாடுகள் அபராதம் இன்றி விடுவிக்கப்பட்டன.

News December 14, 2024

ஸ்ரீவி: 2,878 வழக்குகளில் ரூ.14 கோடி அளவுக்கு தீர்வு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் முதன்மை நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் சிவில், வங்கி வாராக்கடன், காசோலை தொடர்பான வழக்குகள் உட்பட 5,234 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 2,878 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.14,09,04,905 தீர்வு தொகை வழங்கப்பட்டது.

News December 14, 2024

விருதுநகரில் தொடங்கியது கரிசல் இலக்கியத் திருவிழா

image

விருதுநகர் மாவட்டத்தில் கரிசல் இலக்கியத்தைக் கொண்டாடும் மாபெரும் இலக்கியத் திருவிழாவாக திகழும் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2024’ இன்று (டிச.14) துவங்கியது. இந்த விழாவில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி காணொளி காட்சி வழியாக விழாப் பேரூரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.

News December 14, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று(டிச.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த ஆர்டிஓ-க்கள் தலைமையில் நடைபெறும் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பட வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

கரிசல் இலக்கியத் திருவிழா – ஆட்சியர் அழைப்பு

image

சிவகாசியில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் இலக்கிய உரைகளும், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், இலக்கிய தாகமிக்கவர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News December 13, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 102.68 செ.மீ மழை பொழிவு

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 7:00 மணி வரை பெய்த மழையின் அளவு வெளியீடு. மாவட்டத்தில் மொத்தம் 102.68 செ.மீ மழை பெய்துள்ளது. திருச்சுழியில் செ.மீ, காரியாபட்டியில் 5.32 செ.மீ, அருப்புக்கோட்டையில் 9.2 செ.மீ, கோவிலாங்குளம் 8.24 செ.மீ மழை என மாவட்டத்தில் அதிகபட்சமாக வெம்பக்கோட்டை 14 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 13, 2024

பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 13, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவிக்கு கவர்னர் பாராட்டு

image

மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஸ்ரீவி.எம்.என்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி சுபத்ரா கவிதை போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ரூ.30 ஆயிரம் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!