Virudunagar

News March 25, 2024

விருதுநகரில் நான்கு கட்சிகள் இன்று வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் தொகுதியில் நான்கு முனை போட்டி நடைபெறும் நிலையில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌஷிக் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் செல்ல ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

News March 24, 2024

விருதுநகர் அருகே கார் விபத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் பாண்டி. இவர் நேற்று பைக்கில் ஸ்ரீவி – ராஜபாளையம் சாலை, மடவார்வளாகம் பகுதியில் சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கார் தங்கவேல்பாண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் கார் ஓட்டி வந்த மாங்குடி பாண்டியராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

விருதுநகர்: சர்ப்ரைஸ் கொடுத்த கலெக்டர்…

image

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே நடைபெற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு நூறு சதவிகித வாக்கு பதிவு என்பதை வலியுறுத்தி பேசினார். பின்பு இதுவரை நடந்த தேர்தல்களில் தவறாமல் வாக்கு பதிவு செய்து அதிக முறை ஜனநாயக கடமையாற்றிய முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவம் செய்தார்.

News March 24, 2024

விருதுநகர் அருகே ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலான பேச்சி அம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன்.சின்னம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

News March 24, 2024

விருதுநகர்:ஆடு வெங்காயத்தை தின்றதால் ஏற்பட்ட பிரச்சனை

image

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருதுநகர் அருகே மூடியனுர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (21). இவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் காரியாபட்டியில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாண்டியன் நகர் பகுதியில் எதிரே வந்த காரின் மீது இருசக்கர வாகன மோதியதில் இளைஞர் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு.

News March 23, 2024

விருதுநகர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், பாஜக சார்பில், ராதிகாவும் போட்டியிடுகின்றனர்.

News March 23, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

image

பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31ம் தேதி அன்று காலை 7 மணி அளவில் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே கல்லூரி மாணாக்கர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 23, 2024

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க பிரத்யேக செயலி

image

விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க ஏற்கனவே தேர்தல் தொடர்பு கட்டுப்பாட்டு மைய எண்களான 1950, 0452-234600 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் C-VIGIL என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

விருதுநகரில் ஆட்சியர் தகவல் 

image

விருதுநகர், தேர்தலை முன்னிட்டு அச்சடிக்கப்படும் போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.விதியை மீறினால் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127ன் கீழ் 6 மாதம், இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.