Virudunagar

News March 27, 2024

விருதுநகர் தொகுதிக்கு இதுவரை 18 பேர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் தொகுதிக்கு தற்போது வரை 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காங்கிரஸ் தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுயேச்சை மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

விருதுநகர்:விமான நிலைய வேலை வாய்ப்பு பயிற்சி!

image

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA CANDA) நிறுவனத்தால் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News March 26, 2024

விருதுநகர் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருநெல்வேலியில் இருந்து பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 26, 2024

விருதுநகர் ஆட்சியர் அறிவிப்பு

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுவதால் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

விருதுநகரில் பொது தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன.‌ பொது தேர்வுகள் துவங்கி உள்ள நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 26, 2024

நாயை அடித்துக் கொன்றவர் மீது வழக்கு

image

அருப்புக்கோட்டை கட்ட கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் காவியா(24). இந்நிலையில் நேற்று‌ (25.3.24) காவியா வீட்டில் இருந்த நாய் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவரின் நாயை பார்த்து குலைத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த வல்லரசு கம்பியால் காவியா வீட்டில் இருந்த நாயை அடித்து கொன்று விட்டதாகவும், மேலும் காவியா & அவரது அத்தைக்கு வல்லரசு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்

News March 26, 2024

விருதுநகர் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர் உள்ளிட்ட 40 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியுடைய விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 25, 2024

விருதுநகரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

விருதுநகர் கேகேஎஸ்எஸ்என் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் பந்தல் போடும் தொழிலாளியாக உள்ளார். இந்நிலையில் மன வேதனையில் இருந்த மணிகண்டன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் சக்திவேல்(57) கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 25, 2024

விருதுநகர் பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான ஜெயசீலனிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி,அதிமுக நிர்வாகிகள்,தேமுதிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.