India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரியாபட்டி ஆவியூர் அருகே உள்ள கடம்பன்குளம் ஊராட்சியில் சேது என்பவருக்கு சொந்தமான குவாரியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி மருந்துகள் இன்னும் அங்கேயே இருப்பதால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளட்தாக தீயணைப்பு துறையுனர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்கள் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு ஏப் 29ஆம் தேதி முதல் மே 13 வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாவளக்குறிச்சி தனியார் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்தில் ஒரு அறை மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என முதற்கட்ட தகவலில் செய்தி வெளிவந்துள்ளது. மேலும் பட்டாசு ஆலையில் விபத்து குறித்து ஆலைகளில் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு சிவகாசி வருவாய் வட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பேராசிரியர் காலனியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் குடியிருப்போர் அவதி அடைந்து வருகின்றனர். பேராசிரியர் காலனிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது வேதனை அளிப்பதாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நான் முதல்வன் திட்டம் மூலம் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்தும் 12ஆம் வகுப்பு முடித்து அனைத்து மாணவர்களையும் 100% உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசியில் முதன் முறையாக பர்னிச்சர் எக்ஸ்போ 2024 நடைபெற உள்ளது. விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள கம்மவார் திருமண மஹாலில் மே 3 முதல் மே 12 வரை 10 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனுமதி இலவசம் என்பதால் அனைத்து பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்டுள்ளது . இதில் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் பல்வேறு புதிய வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சிவகாசியில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பெய்த சாரல் மழையால் பூமி நன்கு குளிர்ந்து இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கத்தில் இருந்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த சாரல் மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது எதிர்வரும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 2024க்கு தகுதியானவர்கள் (www.sdattn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக – கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் பேராசிரியை நிர்மலா தேவி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இதையடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என ஸ்ரீவி மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி செல்போனில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்த வழக்கில் இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்
Sorry, no posts matched your criteria.