India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாயில்பட்டி அருகேயுள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கணித பேராசிரியர் ராம் குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் பிருந்தா ராகவன் நிர்வாக உரையாற்றினார். பெற்றோர்,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உள்ள உறவை பற்றியும் பெற்றோர்களை மதிப்பது குறித்து விளக்கப்பட்டது
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (65).அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் 11 ஆண்டுகளாக காவலாளியாக பணி செய்துள்ளார்.கடந்த 10 மாதத்திற்கு முன் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அய்யனார் அவருக்கான வருங்கால வைப்பு நிதியை பெற 10 மாதமாக முயற்சித்தும் கிடைக்காத விரக்தி ஆலைக்குள் இன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 573 மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு கடந்த 1.7.23 முதல் தினசரி ஊதியமாக 490 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் விருதுநகர் ஒன்றியத்தில் 23 மஸ்தூர் பணியாளர்களும், மற்ற 10 ஒன்றியங்களில் தலா 20 பணியாளர்கள் என 223 பணியாளர்களுக்கு மட்டுமே தினசரி வேலை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 120 ஏக்கரில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானவாரி நிலங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி பயிரிடப்பட்டது. கிணற்றில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும் தொடர் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கேந்தி பூச்செடிகள் வாடி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருதுநகர், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இன்று (3.5.2024) சிறப்பு கோடைகால தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். பின்னர் மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய ஆட்சியர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் 104 டிகிரி தாண்டி உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 107.6 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு சாலைகள் வெறிச்சோடியது. மேலும் அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் வெப்பம் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையாக இருக்கிறது பிளவக்கல் அணை. சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது. இதன் அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த அணை ரூ.20 லட்சத்தில், 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
விருதுநகர் அருகே ஓ. முத்தலாபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதாக ஆமத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து பாண்டித்துரை என்பவரின் வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீஸார் பாண்டிதுரையை கைது செய்து அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் இளங்கலை மருத்துவர் கல்விக்கான நுழைவுத் தேர்வின் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம் மற்றும் பிற மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு நீட் இளங்கலை மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மே 5ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை 3462 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.