India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியான கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் & ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம். உடற்தகுதி, திறன், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு. பிப்.3ஆம் தேதிக்கு மேல் cisfrectt.cisf.gov.in ல் விண்ணப்பிக்கலாம். *ஷேர்

விருதுநகரில் மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மாதம் ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

காரியாபட்டி, பி.புதுப்பட்டி அரசு பள்ளி விழாவில் பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள் என மாணவர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாடினார் ‘நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை’ என்று தெரிவித்த சிறுவன் அன்புக்கரசுவிடம் ‘உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்’ அமைச்சர் என்று பேசினார்.

தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் சார்லஸ் என்பவர் கடலூர் மாவட்ட டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சக காவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விருதுநகரில் 1000 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாணவர் மாநாடு ஜன.31, பிப்.1 அன்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் ஜெயந்தா, பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் பள்ளி, கல்லூரி மாணர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் தைப்பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொங்கல் கரும்பு விற்பனை நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் கரும்புகள் முழுமையாக விற்று தீர்ந்தாலும் ஒரு சில இடங்களில் கரும்புகள் விற்காமல் தேங்கியது. விற்காத கரும்புகளை வாகனங்களில் ஏற்றிச் சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால், வியாபாரிகள் அப்படியே விட்டு சென்றனர். இதனால் கரும்பு கட்டுகள் அனைத்தும் காய்ந்து வீணாகியுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பட்டாசு தயாரிக்க குளிர்ச்சியான சூழல் உகந்ததாக இருக்காது என்பதால் இன்று பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில் கைதான விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவனுக்கு 3 வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவகாசியில் உள்ள அறிவுசார் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட். மாணவனின் தந்தை தாக்கல் செய்த மனு மீது நூதன முறையில் தண்டனை.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஜன.29) விருதுநகர் மாவட்டம் ஒரு கண்ணோட்டம் ஒரு வரலாற்று பயணம் 1800-1950 புத்தகத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் இந்திய முத்திரைச் சட்டம் 1899, வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரை தீர்வையை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்து கொள்ளலாம். மார்ச் 31 வரை வருவாய் மாவட்டம்தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.