Virudunagar

News October 3, 2024

விருதுநகர்: மாநகராட்சியோடு இணையும் 9 ஊராட்சிகள்

image

சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒன்பது ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆணையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகளின் மக்கள் தொகை, ஊராட்சிகளின் எல்லை அளவு உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

News October 2, 2024

புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நாளை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதில் 5 ஆம் நாள் விழாவான அக்.8 கருட சேவையும், 9-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10 ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது .9-ம் நாளான 12-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

News October 2, 2024

பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுகோள்

image

கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன் மூலம் பணம் கேட்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட மக்கள் போலியான முகநூல் அல்லது இணையவழி பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

News October 2, 2024

கொலை வழக்கில் மூன்று பேர் கைது

image

வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ச் தெருவைச்  சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவரை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஊரணித் தெரு தனியார் தோப்பு பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த கந்தகுமார்(26), மாரீஸ்வரன்(24) மற்றும் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கன்னிச்சாமி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 2, 2024

கருந்திரி கடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு

image

அருப்புக்கோட்டை புறவழிச்சாலை பகுதியில் இன்று (அக்.2) டவுன் போலீசார் ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு சரக்கு வாகனங்களை மடக்கி சோதித்ததில் அதில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கருந்திரி கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புடைய கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

News October 2, 2024

பெருமாள் கோயிலில் ரூ.5 லட்சம் உண்டியல் காணிக்கை

image

ஸ்ரீவி அருகே திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இரண்டாவது வார சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த 28 ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 8 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 428 காணிக்கை கிடைத்தது.

News October 2, 2024

தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழக்கு

image

விருதுநகர் அருகே கூரைக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன்(34). இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சண்டியர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சண்டியர் முனீஸ்வரன் மற்றும் நாகம்மாள் ஆகிய 3 பேர் பாலமுருகனை தகாத வார்த்தையால் பேசி அடித்து காயப்படுத்தி உள்ளனர். இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2024

சிவகாசியில் மகனை கொலை செய்த தந்தை

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வேளாண் துறை ஊழியரான ராமசாமி (74). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த தனது மகன் சுப்பிரமணியனை (34) அரிவாள்மனை மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த தந்தை ராமசாமியை திருத்தங்கல் போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுநகர் வன்னிய பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. எனவே வேலை நாடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 1, 2024

விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சி இணைப்பு

image

விருதுநகர் நகராட்சியோடு கூரைக்குண்டு ஊராட்சியை இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விருதுநகர் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக்கும் நோக்கில் ரோசல்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிகள் நகராட்சியோடு இணைக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது கூரைக்குண்டு ஊராட்சி மட்டும் நகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!